திமுக கூட்டணியில் சி.பி.எம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கட்சி விருப்பமனு அளித்த நபர்களிடம் நேர்காணல் நடத்தியது. மேலும், தி.மு.க வேட்பாளர் பட்டியல் 10 ம் தேதி வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூட்டணி கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் தலா 6 தொகுதிகளை பெற்று உறுதியான நிலையில்,காங்கிரஸ், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு முடிவில்லாமல் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. நேற்று காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவித்த நிலையில் சி.பி.எம் கட்சியுடன் திமுக இறுதி பேச்சுவார்த்தை உடன்பாடு இன்று முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more – திமுக – காங்கிரஸ் கூட்டணி… எத்தனை தொகுதிகள்… என்ன முடிவுகள்…
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது.