ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1500 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை :
சென்னை ராயப்பேட்டையில் அமைத்துள்ள அதிமுக தலைமை கழகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கான முதற்கட்ட திட்டங்களாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அதை தொடர்ந்து அதிமுக – அமமுக கூட்டணி இணைப்பு என்பது வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை கசிந்து திமுகவிற்கு சென்றுவிட்டாக தெரிவித்த அவர், அதிமுகவில் இருந்து விலகி சென்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்தால் ஏற்போம் என்று தெரிவித்தார்.
Read more – மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த மகத்தான கூட்டணி : சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள்
மேலும், அதிமுகவில் முழு தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும், வரும் 12 ம் தேதிக்குள் அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவதுமாக வெளியிப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.




