திமுக வழங்கியது ஏழு வாக்குறுதிகள் அல்ல, ஏமாற்று வாக்குறுதிகள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தை சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க சார்பில் முன்னாள் பாஜக இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்று கிழமை அன்று கன்னியாகுமரியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தார். இதையடுத்து, சென்னை திருமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
Read more – அமமுக கூட்டணி வைத்த ஓவைசி… முஸ்லீம்களின் ஓட்டுக்களை குறிவைக்கிறதா அமமுக ?
கடந்த 2011 ல் திமுக ஆட்சிக்கு வருவதற்காக கலைஞர் கருணாநிதி எல்லாருக்கும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னார். ஆனால், கலைஞர் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்ற பிறகு’ தமிழகத்தில் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் கொடுக்கும் அளவிற்கு இடம் இல்லை என்று மறுத்து விட்டார். அது போல தான் தற்போது திருச்சியில் திமுக தலைவர் சொன்ன ஏழு வாக்குறுதிகளும் ஏமாற்று வாக்குறுதிகள் என்று தெரிவித்துள்ளார்.