கருணாஸ் அடுத்ததாக டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணிக்கு செல்ல இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை :
கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் வைத்து நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திருவாடணை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் மூலம் கருணாஸ் திருவாடானை எம்.எல்.ஏ. ஆனார்.
தாங்கள் அளித்த 12 அம்ச கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் செய்து நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. மேலும், அதிமுக கட்சிக்கு எதிராக 234 தொகுதிகளிலும்பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் என்று நடிகர் கருணாஸ் கையெழுத்திட்ட ஆதரவு கடிதத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய் வாண்டையார் நேற்றுமுன்தினம் கொடுத்தார்.
Read more – தலைதூக்குகிறதா வாரிசு அரசியல்… தேர்தலில் களமிறங்கும் அடுத்த பிரபலத்தின் மகன்…
இந்தநிலையில், தி.மு.க. தரப்பில் இருந்து அவருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. ஆதரவு கடிதத்துக்கு நன்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த நடிகர் கருணாஸ் தி.மு.க. கூட்டணிக்கு அளித்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்றார். தற்போது, கருணாஸ், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணிக்கு செல்ல இருப்பதாகவும், தொகுதி கேட்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.