திமுக சார்பில் போட்டியிடும் 173 தொகுதிகளில் 12 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தநிலையில், தி.மு.க சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார்.
ஆலங்குளம் தொகுதி – டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா
தூத்துக்குடி தொகுதி – பி.கீதாஜீவன்
மதுரை மேற்கு தொகுதி – சி.சின்னம்மாள்
மானாமதுரை தனி தொகுதி – ஆ.தமிழரசி
கிருஷ்ணராயபுரம் தனி தொகுதி – க.சிவகாமசுந்தரி
தாராபுரம் தனி தொகுதி – கயல்விழி செல்வராஜ்
ஆத்தூர் தனி தொகுதி – ஜீவா ஸ்டாலின்
கெங்கவல்லி தனி தொகுதி – ஜெ.ரேகா பிரியதர்ஷினி
மொடக்குறிச்சி தொகுதி – சுப்புலட்சுமி செகதீசன்
திண்டிவனம் தொகுதி (தனி) – பி.சீத்தாபதி சொக்கலிங்கம்
குடியாத்தம் தொகுதி (தனி) – வி.அமலு
செங்கல்பட்டு தொகுதி – வரலட்சுமி மதுசூதனன்
Read more – அமமுக ஆட்சிக்கு வந்தால்… டிடிவியின் தேர்தல் அறிக்கை திட்டங்கள்…
12 பெண்களுக்கு மட்டுமே திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டத்தை தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் தொடர்ந்து பேசிவரும் வேளையில் திமுகவின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.