இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களின் நலனுக்காக மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு பிறகு மாதம் 3,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் 4 2021 ஆம் ஆண்டுக்குள் 44.90 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இவர்களின் மாத வருமானம் 15 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பது கட்டாயம். மேலும் இந்தத் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 15 வயது உடையவர்கள் மாதத்திற்கு 55 செலுத்த வேண்டும்.
30 வயதில் உள்ளவர்கள் 100 ரூபாய் செலுத்த வேண்டும். 40 வயது உள்ளவர்கள் மாதத்திற்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு தொழிலாளர் தனது 18 வயதில் இந்த திட்டத்தில் பதிவு செய்திருந்தால், அவர் ஒரு வருடத்தில் 660 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.
மேலும் அந்த தொழிலாளி 60 வயதுக்குள் ரூ.27,720 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் 42 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
அவர்களுக்கு 60 வயது ஆனவுடன் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வழங்கப்படும். இந்திய அரசின் இந்தத் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மூலம் செலுத்தப்படுகின்றது. எனவே முதியோர்கள் மற்றும் ஏழைகள் இந்த திட்டத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.