திருவாரூரில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஆண்டு முதலே ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் ‘ ஒன்றிணைவோம் வா’ என்ற முழக்கத்தில் தொடங்கி ‘ஸ்டாலின்தான் வாராரு… விடியல் தர போராரு’ என்று வரை தொடர்ந்து பிரசார பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்) தொடங்குகிறார். இதுகுறித்து தி.மு.க. சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15 ம் தேதி (இன்று) கருணாநிதி பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.
Read more – புதுச்சேரி வேட்பாளர் பட்டியலில் இழுபறி : பட்டியல் வெளியிடாத நிலையில் லட்சுமி நாராயணன் வேட்பு மனு தாக்கல்
மேலும், சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3 வது முறையாக வேட்பாளராக மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




