லண்டனில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு இங்கிலாந்து நாட்டின் விண்கோம்ப் நகரின் வடகிழக்கில் அரியவகை விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் சர்வதேச விண்கல் கண்காணிப்பு கேமராக்களில் கண்டு உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அதனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு இரண்டு நாள் நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது .
கண்டுபிடிக்கப்பட்ட வின்கல்லை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் கார்பனேசியா காண்டிரைட் என்னும் அரிய வகையை சார்ந்தது என்பது தெரியவந்தது.
இதனைக்குறித்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் விண்கல் நிபுணரான கேத்ரின் ஜாய் இந்த விண்கல்லை பற்றி கூறுகையில் ,கார்பனேசியா காண்டிரைட் விண்கலானது பெரும் வெடிப்பினால் உருவாகியது.
பூமியில் இதுவரை 65 ஆயிரம் விண்கற்கள் கண்டெடுக்கப்பட்டது. அவற்றுள் 51 மட்டுமே கார்பனேசியா காண்டிரைட் என்று தெரிவித்தார்.
இந்த விண்கல் மூலம் பூமி மற்றும் பிற கோள்களுக்கும் தண்ணீர் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய விளக்கத்தை அறியலாம்.
ஆனால் தற்போது கண்டுபுடிக்கப்பட்ட விண்கல் இதுவரை பூமி ஆராய்ச்சி செய்யாத விண்கல் என்று சொல்லப்படுகிறது.
இந்த விண்கல் சூரிய மண்டலத்தில் உள்ள நீராதாரக் கோள்களின் எரிமலை வெடிப்புகளின் சிதறிய கோளா என்பது பற்றி தெரியவில்லை .
இந்த கார்பனேசியா காண்டிரைட் உள்ள நீரேற்றப்பட்ட தாதுக்களை பற்றிய ஆராய்ச்சியானது பூமியின் பெருங்கடல்களின் எவ்வாறு நீர் நிரப்பப்பட்டு இருக்கும் என்பது பற்றி கண்டறிவதற்கு உதவும்.
மேலும் இந்த விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தையும், நீருள்ள புதிய கோள்களை பற்றிய பல ரகசியங்களை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது .