அமெரிக்காவில் கொரோனாவை இயற்கையாகவே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இதனையடுத்து பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போது கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக் கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் உடலில் கொரோனாவை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவை எதிர்க்கும் சக்தியோடு பிறந்த முதல் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.