ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பர்மிங்காமில் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் டென்மார்க்கை சேர்ந்த கிறிஸ்டோபர்செனை உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி சிந்து 21-8, 21-8 என்ற நேர் செட்டில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் கால் இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அகானே யமாகுச்சியுடன் பி.வி சிந்து போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவரும் நேருக்கு நேர் இதுவரை 17 முறை மோதி, அதில் 10 முறை சிந்துவும், 7 முறை யமாகுச்சியும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு இடையே நடந்த கடைசி மூன்று ஆட்டங்களில் யமாகுச்சியே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.