கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் தற்போது விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கோவை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
Read more – பொய்யான வாக்குறுதி அளித்து அதிமுக தமிழகத்தை வெல்ல நினைக்கிறார்கள் : கனிமொழி
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் எனும் கட்சியை துவங்கியவர். மேலும், அவரது கட்சியை பதிவு செய்வதில் தாமதமானதால் இந்தத் தேர்தலில் கட்சியின் சார்பாக போட்டியிடாமல் சுயேட்சையாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என தெரிவித்தார். வேட்பு மனுவையும் தாக்கல் செய்து அந்த தொகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்ட அவர், தற்போது திடீரென விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் திமுக சுற்றுசூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி நேரடியாக களமிறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




