சில ஸ்மார்ட்போன்களில் சேவையை நிறுத்தும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், iOS 9 மூலம் இயங்கும் சாதனங்களுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதாவது 2.21.50 வாட்ஸ்அப் பீட்டா பதிப்பின் கீழ் உள்ள iOS 9 சாதனங்களால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்கிற செய்தியை மேற்கோளிட்டுள்ளது. எனவே, உங்கள் ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் இருந்தால், வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும்.
வாட்ஸ்அப்பின் வரவிருக்கும் அப்டேட்டை ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4 எஸ் மாடல்களை பயன்படுத்தும் வாட்ஸ்அப் யூசர்களால் புதுப்பிக்க முடியாது, அதன்படி ஒருகட்டத்தில் ஆப் அப்டேட் செய்யச்சொல்லி கேட்கும், அந்நேரத்தில் உங்களால் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய முடியாது என்பதால் ஆப் வேலை செய்ய மறுக்கும். இதேபோல ஐஓஎஸ்-இன் புதிய பதிப்பிற்கு இன்னும் அப்டேட் ஆகாத ஐபோன் 5, 5 எஸ் 5 சி பயனர்கள் விரைவில் அப்டேட் செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இருப்பினும், பிற ஐபோன் பயனர்களும் தேவையானதைச் செய்ய வேண்டும். இந்த செய்தியிடல் பயன்பாட்டை வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த ஐபோன் 5 யூசர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் iOS 10க்கு புதுப்பிக்க வேண்டும்.
இன்றுவரை, iOS 9 இருந்தாலும் ஆப்பை பயன்படுத்த முடிந்தது. இருப்பினும், தற்போதைய புதிய அறிவிப்பின் படி, iOS 10 அப்டேட் செய்வது அவசியமாகிறது. அதாவது யூசர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த ஐபோன் 5 அல்லது அதற்கு பிந்தைய மாடல் ஸ்மார்ட்போன்கள் தேவைப்படும். இந்த மாற்றம் ஐபோன் 4 எஸ் யூசர்களை பயனர்களைப் பாதிக்கும், ஆனால் இதனால் குறைந்த சதவிகித யூசர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் பயன்படுத்துபவர்கள் தங்களது ஸ்மார்போனில் Settings > General > About, to find out the iOS version என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். Android யூசர்கள் தங்களது ஸ்மார்ட்போன் எந்த Android பதிப்பில் இயங்குகிறது என்பதைக் காண About Phone என்ற பகுதிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும், பழைய iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களுக்கான சேவையை வாட்ஸ்அப் நிறுத்தி வைக்கிறது. 2020 தொடக்கத்தில், ஐபோன்கள் iOS 8 மற்றும் அண்ட்ராய்டு 2.3.7 ஓஎஸ்-ல் இயங்கும் அண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கான சேவையை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.