அதிமுகவில் நாங்கள் அனைவரும் உழைப்பால் மேலே வந்தவர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது; செல்லூர் ராஜு கடந்த இரண்டு முறை இதே தொகுதியில் இன்று உங்கள் ஆதரவால் வெற்றி பெற்றவர். ஆதலால் இந்த முறை அவர் பெறப்போகும் வெற்றி சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. சரித்திர வெற்றியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Read more – இன்றைய ராசிபலன் 26.03.2021!!!
மேலும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி மட்டுமே மக்கள் சேவை கூட்டணி. திமுக அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக கழகத்தில் நான் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் உழைப்பால் வந்தவர்கள். ஆனால் திமுகவில் தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்து வருகிறார்கள். நிதி நிலைமை என்னும் பெயர் வைத்து தமிழகத்தை மேலும் கொள்ளை அடிக்க பார்க்கிறார்கள். ஆதலால் திமுக என்னும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.