மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று திங்கள் கிழமை தேதி 29.03.2021, நல்ல நேரம் :காலை 6.-30-7.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் மாலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
பொருளாதாரம் உங்களுக்கு இன்று சிறப்பாக அமையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும்.
ரிஷபம் :
சுபகாரிய முயற்சிகள் நல்ல பலனை அளிக்கும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் வராமல் தவிர்ப்பது நல்லது. தெய்வ தரிசனம் குடும்பத்திற்கு நிம்மதியை தரும்.
மிதுனம் :
உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்தடையும். உடல் ஆரோக்கியத்தில் தொடந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தொழிலின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.
கடகம் :
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நண்பர்களின் உதவியால் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மம் :
நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை அளிக்கும். குடும்பத்தில் உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை குறைக்க முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
கன்னி :
பணிபுரியும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக அமையும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
துலாம் :
புதிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும்.இன்று உங்கள் ராசிக்கு எதிலும் கவனமாக இருக்க வேண்டிய நல்லது. எதிர்பாராத செலவுகளால் உங்கள் கையிருப்பு குறையும். பிறருக்கு உதவும்போது உங்கள் தேவைக்கு ஏற்ப உதவுவது நல்லது.
விருச்சிகம்:
தொழில் ரீதியான விஷயங்களில் தொடர் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புதிய முதலீடுகள் புதிய தொழில் சிந்தனைகள் செயலாக்கும் நாள். தடை ஏற்பட்டு கொண்டிருந்த கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு:
குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மனதளவில் மகிழ்ச்சி அழைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான தகவல்கள் வந்து சேரும். பணியின் காரணமாக உடல் ரீதியாகவும் மனதளவிலும் சோர்வு ஏற்படும்.பணிபுரியும் இடங்களில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள்.
மகரம்:
எடுத்த காரியங்களில் துணிந்து செயல்படுவது நல்லது. தேவை இல்லாத அச்சத்தினால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட நேரிடும். வெளியூர் பயணங்கள் இனிதாக நிறைவேறும். கடன் பிரச்சினை குறைவதற்கான அமைப்பு மேலோங்கும்.
கும்பம்:
எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். சொந்தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி பந்தங்கள் தொடரும். நிலம் மனை வீடு போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் நீங்கி சந்தோஷமான மன நிலை உண்டாகும்.
மீனம்:
பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மனதளவில் ஏற்பட்ட சோர்வுகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் நல்ல பெற வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நன்மை அளிக்கும். சகோதரர்களிடையே ஒற்றுமை மேலோங்கும்.