அதிமுக கூட்டத்தில் ஜெயலலிதா பற்றி பேசும் போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது ;
சாதாரண தொழிலாளியின் மகனான நான் அதிமுக கொடி பிடித்து அமைச்சர் ஆனவன், அப்படி இருந்த என்னை பெற்ற பிள்ளையை போல் பார்த்தவர் ஜெயலலிதா. ஒருமுறை உடல் நலக்குறைவோடு இருந்தபோது அப்போலோ மருத்துவமனையில் தன்னை அனுமதித்து சிகிச்சை அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் தன்னை வந்து கவனித்துக் கொண்டார்கள். அந்த அளவிற்கு நான் விஸ்வாசம் உடையவன்.
Read more – பிரதமர் எத்தனைமுறை தமிழகம் வருகிறாரோ.. அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாக்குகள் குறையும்.. முக ஸ்டாலின்
ஆனால், இப்பொழுது நான் ராஜவர்மன் வளர்ச்சியை கெடுத்ததாக சொல்லுகிறார்கள். ஜவர்மன் ஜெயிக்க வைக்க எவ்வளவு சிரமப் பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும் என்று ராஜேந்திர பாலாஜி கதறி அழுதார். மேலும், அதிமுக இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலில் நின்றாலும் வெற்றி பெரும் அளவிற்கு தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.