45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி கடந்த ஜனவரி 16 ம் தேதி தொடங்கி போடப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் வழங்கப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் முதல் பல பிரபலங்கள் வரை செலுத்திக்கொண்டனர்.
இந்தநிலையில், இன்று ஏப்ரல் 1 ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கம், அசாம் : பரபரப்பான சூழ்நிலையில் இன்று வாக்குப்பதிவு
மேலும், நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்ற போதிலும், தடுப்பூசிகள் வீணாவதை மணிலா அரசுகள் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.