பத்திரிகை மற்றும் ஊடகங்கள் நடத்தும் கருத்து கணிப்பு மூலம் மக்கள் மனதை மாற்றமுடியாது என முதல்வர், துணைமுதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கும் நிலையில் தற்போது மேலும் ஜூவியின் கருத்து கணிப்பும் அக்கட்சிக்கு ஆதரவாக வெளிவந்துள்ளது. அதில் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தொடர்ந்து தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பத்திரிகைகளும், ஊடகங்களும் கருத்து கணிப்புகள் கடந்த காலத்தில் நடத்தி முற்றிலும் தவறாக போனது நாம் அறிந்ததே.
Read more – மைக் மீது உள்ள கோவத்தை மற்றவர் மீது காட்டிய கமல்.. இதுதான் மாற்றத்திற்கான அரசியலா ?
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய் பிரச்சாரங்களை கண்டு மக்கள் யாரும் அதிமுக ஆதரவு தரும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. அதிமுக வேட்பாளர்கள் மக்களை சந்தித்தும் பொழுதெல்லாம் நல்ல ஆதரவை தருகிறார்கள். அதிமுக மீது மக்கள் கொண்டிருக்கும் பேரண்பு, வாக்குகளாக பொழிய இருக்கிறது. மீதும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.