எய்ம்ஸ் செங்கலை தூக்கிக்கொண்டு திரியும் உதயநிதி, கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வருவாரா என்று விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணப்பாறை :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் முண்டியடித்து கொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.
மணப்பாறை தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயபிரபாகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர், எனது முதல் அரசியல் பயணம் தொடங்கியது இந்த மணப்பாறையில் தான். ஒரே ஒரு செங்கலை கையில் எடுத்துக்கொண்டு இது தான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று சுற்றித்திரியும் உதயநிதி. அவர்களது ஆட்சி காலத்தில் கச்சத்தீவை பெருமையாய் தூக்கி கொடுத்தனர். இப்பொழுது அந்த தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வருவாரா ? திமுக மீதே ஆயிரம் குறைகள் இருக்கு, இதைப்பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கு என்று கேள்வி எழுப்பினார்.
Read more – ஓட்டு கேட்டு, பெண்ணின் கையில் முத்தம்.. திமுக வேட்பாளரின் அட்டூழிய பிரச்சாரம்..
மேலும், நாங்கள் கூட்டணி வைத்துள்ள அமமுகவில் தான் பழைய அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் நமது கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.