தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கு என பரவும் வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
கொரோனா பரவல் தற்போது நாடு முழுவதும் மீண்டும் தனது 2 வது அலை வீச தொடங்கியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்றானது அதிதீவிரமாக பரவிவருகிறது.
அதனைத்தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாளை சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்தநிலையில், இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ;
தமிழகத்தில் 6 ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமலாகும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். ஆனால், வரும் 7 ம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், இதுவரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. இருந்தாலும், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
Read more – 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது : புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க்
சுப மற்றும் துக்க காரியங்களில் அதிக அளவில் கூடுவதை முடிந்த வரை தடுங்கள் என்றும், தேவையில்லா விசயத்திற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், வாக்களிக்க செல்லும்போது கட்டாயம் ’மாஸ்க்’ அணிந்து செல்ல வேண்டும். வாக்குச்சாவடிகளில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவின்போது கடைசி ஒருமணி நேரத்தில், கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.