திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தாரகேஷ்வரில் நடந்த பிரச்சாரத்தின்போது மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் 3 ம் கட்டமாக தேர்தல் நடைபெற்று முடித்தநிலையில், மீதம் 5 கட்டமாக நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில், கடந்த 3 ம் தேதி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், முஸ்லிம்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டு, தங்கள் ஓட்டுகள் பிரிய வழிவகுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, மம்தா மத அடிப்படையில் பேசி சிறுபான்மையினர் மக்களின் ஓட்டுக்களை பிரிக்க முயற்சி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.
Read more – இன்றைய ராசிபலன் 08.04.2021!!!
இதைத்தொடர்ந்து, மம்தா பானர்ஜியின் பேச்சானது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மம்தாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.