நோக்கியாவின் புதிய X, G மற்றும் C தொடர் ஸ்மார்ட்போன்கள் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன,.
இதில் நோக்கியா X20, நோக்கியா X10, நோக்கியா G20, நோக்கியா G10, நோக்கியா C20 மற்றும் இறுதியாக நோக்கியா C10 ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும்.
X சீரிஸ் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது, G-சீரிஸ் மீடியாடெக் சிப்செட் உடன் இயங்குகிறது.
நோக்கியா C20 உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் ஜூன் முதல் சேன்ட் மற்றும் டார்க் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் மற்றும் 1/16 ஜிபி, 2/32 ஜிபி உள்ளமைவுகளில் கிடைக்கும்.
நோக்கியா C10 உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் லைட் பர்பில் மற்றும் கிரே கலர் விருப்பங்களில் 1/16 ஜிபி, 1/32 ஜிபி மற்றும் 2/16 ஜிபி ஆகிய உள்ளமைவுகளில் கிடைக்கும்.
- நோக்கியா C20, நோக்கியா C10 விவரக்குறிப்புகள்
- நோக்கியா C20 மற்றும் C10 ஸ்மார்ட்போன்கள் இரண்டும் 6.5 இன்ச் V-நாட்ச் டிஸ்ப்ளே, HD+ (720 x 1,600 பிக்சல்கள்) ரெசல்யூஷன், 20: 9 திரை விகிதம் மற்றும் 400-நைட்ஸ் பிரகாசத்துடன் கிடைக்கிறது.
- நோக்கியா C20 ஆக்டா கோர் UNISOC SC 9863 SoC ஆல் இயக்கப்படுகிறது, நோக்கியா C10 குவாட் கோர் UNISOC SC7331E சிப் உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்க ஸ்டோரேஜ் ஆதரவுடன் 2 GB RAM மற்றும் 32 GB வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.
- இரண்டு தொலைபேசிகளும் முகம் திறத்தல் அம்சத்தை ஆதரிக்கின்றன, ஆனால் கைரேகை சென்சார் இல்லை.
- கேமராக்களைப் பொறுத்தவரை, நீங்கள் பின்புறத்தில் ஒரு 5MP ஷூட்டரையும், செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்காக 5MP கேமராவை முன்பக்கத்திலும் பெறுவீர்கள்.
- நோக்கியா C20 மற்றும் C10 ஆகியவை 5000 சார்ஜிங் ஆதரவுடன் 3000 mAh பேட்டரியுடன் ஆதரிக்கப்படுகின்றது. ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 11 (GO பதிப்பு) இல் 2 வருட உத்தரவாத புதுப்பிப்புகளுடன் இயங்குகின்றன.
- இணைப்பு விருப்பங்களில் 4ஜி, வைஃபை, சார்ஜ் செய்வதற்கான மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட், புளூடூத் 4.2 மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் ஆகியவை அடங்கும்.