லக்னோவில் கொத்து கொத்தாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல் எரிக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் இந்த தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருவதால் பல உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
Read more – சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் இனி ஆன்லைன் வழியாக மட்டுமே வழக்கு விசாரணை !!
இந்த சூழலில், பைகுந்த் தாம் என்ற தகன மேடையில் மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடலை கொத்து கொத்துக்காக எரிக்கப்பட்ட காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்தவர்களின் உடலை தகனம் செய்ய இடமில்லாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநகராட்சி ஊழியர்கள் எரித்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.