கொரோனா பரவல் காரணமாக வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 739 புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து வரலாற்று நினைவு சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை வரும் மே 15 ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Read more – லக்னோவில் கொத்து கொத்தாக எரியூட்டப்பட்ட உயிரிழந்தவர்களின் உடல்… வைரலாகும் வீடியோ காட்சி…
அதில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து நினைவு சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே மாதம் 15 ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக மூடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.