
சென்னை: நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகே தெரியவரும் என சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று (ஏப்.15) கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், இன்று (ஏப்.16) அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் உடல்நிலை குறித்து சிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தற்போது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், ”நடிகர் விவேக்கிற்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், கரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அவருக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. எக்மோ கருவி உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், சுயநினைவு இல்லாத நிலையில் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




