நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலநடுக்கம் காரணமாக நூலகங்களில் இருந்து புத்தகங்கள் கீழே விழுந்துள்ளதாகவும், பல வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக கன்னியாகுமரி லீபுரம் அழகப்பபுரம் சுசீந்திரம் நாகர்கோவில் போன்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை பகுதியில் பாலத்தில் நடந்து சென்ற ஒரு சிலர் நில அதிர்வு காரணமாக கீழே விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.