நாய் ஒன்று 30க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றியதோடு மட்டுமல்லாது, ஒவ்வொரு நாட்டிலும் அது எடுத்துக்கொண்ட போட்டோக்களின் தொகுப்புகள், சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
உலகம் சுற்றும் வாலிபன் என்று சொன்னால், நமக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் நமது நினைவிற்கு வருவார். இனி உலகம் சுற்றிய விலங்கு என்றால், இந்த பிளப்பி நாய் தான் நமக்கு நினைவிற்கு வரும்போல.
நாம் வீட்டில் நாய் வளர்த்து வந்தால், நாம் எங்கேயாவது செல்ல நேரிட்டால், நாய்க்கு தேவையான உணவுகளை முன்கூட்டியே ஒரு இடத்தில் வைத்து, நாயை வீட்டில் தான் விட்டு செல்வோம். ஆனால், இந்த நாயின் உரிமையாளர்கள், தாங்கள் சென்ற 32 நாடுகளுக்கும் இந்த நாயை அழைத்து சென்றதோடு மட்டுமல்லாது, ஒவ்வொரு நாட்டின் இயற்கை பின்னணி சூழலிலும், அந்த நாயை போட்டோ எடுத்து உள்ளனர். அதுமட்டுமல்லாது, இந்த போட்டோக்களின் தொகுப்பை, தற்போது இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில், ஏப்ரல் 23 ஆம் தேதி, இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ள நிலையில், தற்போது வரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை கண்டுகளித்து உள்ளனர். நெட்டிசன்கள், இந்த வீடியோவிற்கு பல்வேறு விதமான கருத்துக்களை எமோஜி வடிவிலும், நாயின் உரிமையாளர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் எனது கனவு என்று ஒருவர், இந்த வீடியோவிற்கு தெரிவித்துள்ள கருத்து பலரின் புருவத்தை உயர்த்த செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்து