செல்ஃபி எடுக்கும் போது தனது விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர் விமல்.கிராமிய கதை பொதிந்த கதைக்களங்களுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவரே. தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனது செல்போனை இருக்கையில் வைத்து விட்டு அங்கு வந்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துவிட்டு கீழே பார்க்கும் போது அந்த இடத்தில் இருந்த தனது விலையுயர்ந்த செல்போன் காணாமல் போனதாக நடிகர் விமல் கூறியுள்ளார்.




