இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்புகள் 3,34,78,419 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,18,181 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.




