வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாளை (செப். 25) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதுபோல செப். 26-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும்,
செப். 27-ந் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இரு நாட்களுக்கு அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.




