தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 77.9 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், திமுக 208 இடங்களிலும், அதிமுக 29 இடங்களிலும், சி.பி.ஐ. – 1, சி.பி.எம். – 2, தே.மு.தி.க. – 1, காங்கிரஸ் – 7, ம.தி.மு.க. – 6, அ.ம.மு.க. – 2, பா.ம.க. – 3, வி.சி.க. – 2, சுயேச்சைகள் – 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர் கூட வெற்றி அடைந்தார்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தம்மை ஜெயிக்க வைத்த தொகுதி மக்களுக்கு நன்றி கூறுவது வழக்கம், ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெறும் 6 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தன்னை நம்பி வாக்களித்த அந்த 6 பேருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துண்டு பிரசுரம் அச்சடித்துள்ளது சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் வாக்குகளில் என்னை தோற்கடித்தாலும், வாழ்க்கையில் ஜெயிக்க கற்றுக்கொடுத்துள்ளீர்கள். ஆறுதலுக்காக 6 ஓட்டு போட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அந்த நோட்டீஸ்…





