கோவாவில் குடிமகன்களை கவரும் வகையில் மதுபானங்களுக்கென மட்டுமே தனியே அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக மதுபானங்களுக்கென தனி அருங்காட்சியகம், கோவா மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆல் அபௌட் ஆல்கஹால் என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியம், வடக்கு கோவாவில் உள்ள காண்டொலிம் கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் நந்தன் என்பவர் குத்சத்கார் உருவாக்கியுள்ள அருங்காட்சியகத்தில், புகழ்பெற்ற ஃபெனி மதுபானத்துடன் தொடர்புடைய பழங்காலப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மதுபான வகையான ஃபெனியை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட கண்ணாடி குவளைகளும், இதில் இடம் பெற்றுள்ளன.
கோவாவில் மதுபானத்துடன் தொடர்புடைய வரலாற்றை பறைசாற்றுவதே, இந்த அருங்காட்சியத்தின் நோக்கம் என தொழிலதிபர் நந்தன் விளக்கம் தெரிவித்துள்ளார்.