இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), வடக்கு அயர்லாந்துக்கு சுற்றுலா பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் வடக்கு அயர்லாந்திற்கான பயணத்தை திடீரென ரத்துசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு இரவு தங்க வைக்கப்பட்டார் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக, பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மகாராணியார் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை அளித்தனர். இதையடுத்து, கடந்த புதன் கிழமை பிற்பகல் வழக்கமான சோதனைகளுக்காக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் இருந்தார். நேற்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்பி விட்டார் என தெரிவித்துள்ளார்.
மகாராணியார் தற்போது நல்ல மனநிலையில் உள்ளார் என்பதையும் உறுதி செய்தார்.
சமீபத்தில் பத்திரிகை நிறுவனம் அளித்த சிறந்த முதியவருக்கான விருதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஏற்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




