“மதசார்பற்ற இந்தியா” வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்; மேற்குவங்கத்தை போல கோவா மாநிலமும் என் சொந்த மாநிலம் என மம்தா பானர்ஜி பேட்டி.
டெல்லி,
கோவா மாநிலம் அடுத்த வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை மாநில ஆளும் பாரதிய ஜனதா அரசு தொடங்கிவிட்டது; பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்திலும் எதிர்க்கிறது.இந்நிலையில், நேற்று மாலை 4 நாள் பயணமாக கோவா சென்றுள்ள மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று காலை கட்சியின் முக்கிய மாநில பொருப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பனாஜியில் கட்சியின் தலைவர்களிடம் உரையாற்றிய மம்தா, நான் உங்களுடைய சகோதிரி போல உங்களை சந்திக்க வந்துள்ளேன், உங்களுடைய செல்வாக்குகளை காப்பாற்ற நான் வரவில்லை மாறாக மக்கள் இங்கு சந்திக்கும் பிரச்சனையை சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு நாம் எவ்வாறு உதவுவது என பேசவே வந்துள்ளேன். மேற்கு வங்க மாநிலம் நாட்டின் வலுவான மாநிலமாக உள்ளது, கோவா மாநிலமும் எதிர்காலத்தில் வலுவான மாநிலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்தார்.
மாநிலத்தின் புதிய விடியலை காண உங்களை போல நானும் விரும்புகிறேன் என கூறிய, சிலர் கேட்கிறார்கள்? மேற்கு வங்கத்தில் உள்ள மம்தாவினால் கோவாவில் என்ன செய்ய முடியும் என? ஏன்? செய்ய முடியாது நாம் அனைவரும் இந்தியர்கள் நாட்டில் எங்கு மக்களுக்கு பிரச்சனை என்றால் சென்று கேட்கலாம் என்பதை நினைவூட்டுகிறேன் என்றார். நமக்கு மதசார்பற்ற இந்தியா தேவை! நானும் மதசார்பற்ற இந்தியா வேண்டும் என விரும்புகிறேன், இதனால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும் அதுவே என் விருப்பமும் கூட என கூறிய மம்தா மேற்கு வங்கம் மாநிலம் எப்படி என் சொந்த மாநிலமோ அதேபோல தான் கோவா மாநிலமும் என் சொந்த மாநிலம் என்றார்.
4 நாள் பயணத்தின் போது 2022 தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்ள மம்தா திட்டமிட்டு உள்ளதாகவும், ஆனால் திட்டங்கள் குறித்து இப்போதைக்கு கூறமுடியாது என கோவா மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.