பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை என்ற மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விடுமுறை அமர்வில் நாளை விசாரணை.
டெல்லி,
தீபாவளி, புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பண்டிகை கொண்டாடுவதற்கு பட்டாசுகளை வெடிப்பார்கள். வெடிக்கப்படும் பட்டாசு காரணமாக ஏற்படும் மாசுபாட்டால் சுற்றுசூழல் மற்றும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கிறார்கள் என்பதை எல்லாம் மேற்கோள்காட்டி பட்டாசுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 29ம் தேதி கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் அனிருத்தாராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து. அப்போது,பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிப்பதற்கு முழுமையான தடை விதிப்பதாக உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் கல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கவுதம் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தார். இவ்வழக்கு நாளை உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான விடுமுறை அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த 29ம் தேதி பட்டாசு வெடிக்க தடை கோரிய வேறு ஒரு வழக்கில்,பசுமை பட்டாசு மட்டும் வெடித்து கொள்ளலாம் எனவும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்தால் மாநில காவல்துறை மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளே பொறுபாவர்கள் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.