சேலம் உருக்காலை உத்திசார் பங்குவிலக்கல் பணிகளை இரண்டு கட்டங்களாக மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

டெல்லி, சேலத்தில் உள்ள உருக்காலை மொத்த பரப்பளவு என்ன என்றும்; மத்திய அரசின் முதலீடு திரும்ப பெறும் முடிவு மத்திய அரசிடம் உள்ளதா? என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய எஃகு துறை அமைச்சர்,
சேலம் உருக்காளையின் மொத்த பரப்பளவு 3973.08 ஏக்கர் என்றும்; சேலம் உருக்காலை மீதான முதலீட்டை திரும்ப பெற மத்திய அரசு கொள்கை முடிவு செய்துள்ளது என்றும் அதனை இரண்டு கட்ட ஏலம் மூலமாக மேற்கொள்ள 2016ம் ஆண்டு முதல் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு, சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் , உத்திசார் பங்குவிலக்கல் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது என்று மக்களவையில் அப்போதைய மத்திய உருக்குத் துறை அமைச்சர் சௌத்ரி பிஜேந்தர் சிங் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




