கூகுள் நிறுவனம் தனது கூகுள் குரோம் தேடல் பொறியின் வடிவத்தை 8 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியுள்ளது. பெரியளவில் எதுவும் செய்யாமல் நிறங்கள் மட்டும் சற்றும் அடர்த்தியாகப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது தேடல் பொறியான கூகுள் குரோமை அறிமுகம் செய்தது. சிகப்பு, மஞ்சள், பச்சை நிறத்தை வட்ட வடிவத்தில் கொண்டு வரப்பட்டு, அதற்கு நடுவில் நீல நிறத்தை வைத்து லோகோ வெளியானது. மேலும் இந்த தேடல் பொறி மொபைல் செயலியாகவும் உள்ளது.
மொபைல் போன்களை பயன்படுத்தி வரும் அனைவரும் தங்களுடைய தேடல் செயல்பாடுகளை, கூகுள் குரோம் கொண்டு நிறைவு செய்கின்றனர். இதுவரை மூன்று முறை கூகுள் குரோமின் லோகோ வடிவத்தை கூகுள் நிறுவனம் மாற்றியுள்ளது.
தற்போது 2014-ம் ஆண்டுக்கு பிறகு கூகுள் நிறுவனம் குரோமின் லோகோவை தற்போது மாற்றியுள்ளது. புதிய லோகோவில் நிறங்கள் அனைத்தும் சற்று அடர்த்தியாகவுள்ளது. மேலும் நடுவிலுள்ள நீல நிறம் சற்று பெரிதாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய லோகோ சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.