68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது ‘சூரரைப்போற்று’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது சூர்யாவிற்கு (சூரரைப்போற்று) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் (சூரரைப்போற்று), சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 5 தேசிய விருதுகளை (சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை & சிறந்த படம்) ‘சூரரைப்போற்று’ திரைப்படம் வென்றுள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இயக்குநர் சுதா கொங்காரா, ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. 5 விருதுகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.
‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் சிறந்த தமிழ்படமாக தேர்வாகியுள்ளது.
யோகிபாபு நடிப்பில் வெளிவந்த ‘மண்டேலா’ திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படத்தொகுப்பாளர் விருது -ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
Tanhaji: The unsung warrior படத்திற்காக- பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு விருது.
சிறந்த இசையமைப்பாளர் விருது- தமன் (அலா வைகுந்தபுரமுலோ தெலுங்கு படத்திற்காக)
சிறந்த இயக்குநருக்கான விருது:சச்சிதானந்தன் ( அய்யப்பனும் கோஷியும் மலையாள திரைப்படம்).
மேலும், திரைப்படம் எடுக்க மிகவும் சாதகமான மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.