“கடைத் தேங்காய்களை எடுத்து கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு கொடுக்கின்றனர்” என எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ”ஸ்டேட் வங்கியில் கடந்த 8 ஆண்டுகளில் ₹1.45லட்சம் கோடி வராக்கடன் இருக்கிறது. இதில் வசூலானது ₹19,000 கோடி மட்டுமே.. மீதமுள்ள வராக்கடன்கள் ஸ்வாஹா… கடனை கட்டத்தவறிய கார்ப்பரேட் முதலாளிகளின் பெயர்களை ரகசியமாக வைத்துள்ளனர். அப்பாவி ஏழை, எளிய மக்கள் கல்விக்கடன் & குறு நிதி கடன்களை வாங்கினால், அதை வசூலிக்க கழுத்தில் துண்டைப்போடுவார்கள்…கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள். இப்படியாக மக்களின் சேமிப்புகள் சூறையாடப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது அதிகமாக ரீ ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.