பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளை போல் இல்லாமல், பள்ளிகள் செயல்படும் என்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறாது என்றும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில்,சனிக்கிழமைகளில் சில பள்ளிகள் இயங்குவதாகவும், வகுப்புகள் நடப்பதாகும் புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பள்ளி, வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறியுள்ளது.




