தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் 76வது சுதந்திர தின விழாவில், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31% இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி, தலைமை செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




