தடம் எண் D70 பேருந்து பயணிகளை கோயம்பேட்டில் இறக்கிவிட்டு பலரை தன்னுள்
சுமந்துகொண்டு
கதவு சாத்தப்பட்டவுடன்
அம்.தொ.பேட்டை நோக்கி
பேருந்து நிலையத்தின்
வாகன ஒலியை கிரகித்துக் கொண்டு நகரப்பேருந்து நகரத் தொடங்கியது..
பேருந்து மெயின் ரோட்டின் இடப்புறம் திரும்பி வாகன ஜாமில் தானும் ஐக்கியமாகி மெதுவாக
நகர்ந்து நகர்ந்து..விஜயகாந்த் திருமண மண்டப ஸ்டாப்பில் பேருந்து நிற்கவும்
சில திருவாளர்
பொதுஜனங்கள் பேருந்தில் ஏறவும்,
எச்சில் தொட்டு கடுகடுப்புடன் நடத்துனர் டிக்கெட்களை கிழித்து கொடுத்துக் கொண்டிருக்க..
,உட்கார்ந்தவரில் ஒரு பயணி
கலக்டர்நகர் டிக்கெட் என நடத்துனரிடம் கேட்க…நான் அந்த பயணியை ஒட்டி உரசி அங்காவது அவர் எழுந்த பின் எனக்கு சீட் கிடைக்குமே என ஆவலில் அவர் சீட் அருகே நகர்ந்து நிற்கிறேன்.
நான் முதியோர் பஸ்பாஸில் தான் பயணிக்கிறேன்.
ஞாயிற்று கிழமை ஆனாலும்…வாரநாட்களின் கூட்டம் பேருந்திலும்..வெளியே ஓடும் அனைத்து வாகனங்களிலும்.
பஸ்ஸும் திருமங்கலம் ஸ்டாப்பில் நிற்கவும், சிலர் இறங்க, பலர் ஏறவும் தன் இருக்கையிலே அமர்ந்தவாறே நடத்துனர் விசில் அடிக்க,
திரும்பி பார்த்தால் கால் ஊனமானவர் ஒருவர்பேருந்து
நடுவே
தனது ஊன்று கோலோடு சீட் ஓரம் நிற்கிறார்.
முதியோர் ஊனமுற்றோர் சீட்டில் செல்லில் கேம் விளையாடி அதிலே மூழ்கி கொண்டிருக்கும் யூத் இருவர்.
ஊனமுற்றவரை யாரும் கவனிக்கவும் இல்லை.
அவரவர் கையிலே செல்..பலரது வாயிலே சொல்..வாட்ஸ்அப் மீது விரல்கள் அலைய பாடிபுதூர் தாண்டி கலக்டர் நகர் ஸ்டாப்பில் நிறைய பேர் இறங்க..,என் அருகிலுள்ள பயணி இறங்க அதிலே
நான் ஒரு நிமிடம் அமர்ந்துவிட்டு எழுந்து , பின்பு அந்த உனமுற்றவரை எனது சீட்டில் உட்கார வைத்தேன்..
கொஞ்சம் பேருந்து ப்ரீ ஆயிற்று…
கோல்டன் பிளாட் தாண்டி வாவின் வர, அவருக்கு அடுத்த சீட்காரர் எழுந்திருக்க..
கால் ஊனமுற்றவர் ஜன்னல் ஓர இருக்கைக்கு நகர்ந்து தன் உன்றுகோலை அங்கு ஓரமாக சாய்த்து விட்டு என்னை உட்கார சொல்லிவிட்டு..பேச்சு கொடுத்துக் கொண்டு பயணிக்கையில்..வாவாவினை பேருந்து கடக்க பஸ் பெரும்பாலும் காலி.
அம்பத்தூர்IT பார்க் ஸ்டாப்பில் முதியோர் மாற்றுதிறனாளிகள் சீட்டில் அமர்ந்த யூத்கள் முதுகில் பேக்ஐ மாட்டிக் கொண்டு அங்கே இறங்க..
என்னருகில் அமர்ந்தவர் சொன்னார் “எனக்கு உடல் ஊனம்..
அவர்களுக்கோ
மனமே ஊனம் சார்”
அம்பத்தூர் தொழிற்பேட்டை ஸ்டாப் வர நான் அவரிடம் விடைபெற்று இறங்கினேன்.