அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி விவகாரம் குறித்தும், அதிமுகவின் பொதுச் செயலாளருக்கான தேர்தல் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடியின் கனவான அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கான செயல் திட்ட வியூகம் இன்றைய கூட்டத்தில் வகுக்கப்படும் என்று தெரிகிறது. அதைவேளையில் கூட்டணி கட்சியாக உள்ள பாஜகவில் இருந்து தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதனால் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செம அப்செப்டில் இருக்கிறார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அவருக்குப் பதிலடி கொடுத்து வருகிறார். இதுகுறித்தும் சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து, உதயகுமாருக்கு பெற்றுத் தரும் வழிவகை குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.