சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை 10.05 மணி வாக்கில் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிக்க 150 பேர் தயாராக இருந்தனர். இந்த நிலையில், விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எதனால் என்ற காரணம் பற்றி எங்களுக்கு எந்தவித தகவலும் அறிவிக்கப்படவில்லை என பயணிகள் அனைவரும் வேதனை தெரிவித்தனர். வேறு மாற்று விமானங்கள் எதனையும் விமான நிறுவனம் ஏற்பாடும் செய்யவில்லை எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இதனால், விமான நிலையத்திலேயே பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இது போன்று ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் நேற்று அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. லண்டனில் இருந்து டெல்லி வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா விமானம் ஒன்று, வானிலை மோசம் அடைந்த நிலையில், நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கிவிட பட்டது பின்னர், 2 மணிநேரத்திற்கு பின்னர் வானிலை தெளிவடைந்ததும், லண்டனுக்கு புறப்பட விமானம் தயாரானபோது, விமானி அதனை இயக்க மறுத்துவிட்டார். தனக்கான பணி நேரம் கட்டுப்பாடுகளை சுட்டி காட்டி அவர் விமான இயக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனமும் பயணிகளின் பாதுகாப்பே அதிக முக்கியம் வாய்ந்தது என கூறி விமானம் புறப்படுவதற்காக, மாற்று விமானிகள் மற்றும் ஊழியர்களை ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.