சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதிவாரியாக தனித்தனியே சந்திக்கிறார்.

கடந்த வாரத்தில் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அது வழக்கமான ஒரு பொதுக்குழு கூட்டமாக இல்லாமல் தேர்தலுக்கான முதல் நிகழ்ச்சி போல அமைந்திருந்தது. மதுரை விமான நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கி.மீட்டர் வரை ரோடுஷோ நடத்தினார் ஸ்டாலின். இந்த நடைபயணத்தின் போது அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்தார். மதுரை, சேலம் என அடுத்தடுத்த பயணங்களை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் தமிழ்நாடு பயணிக்க திட்டமிட்டுள்ளார்.
மதுரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, நிர்வாகிகளைப் பார்த்து சென்னைக்கு வாருங்கள், ஒன் டூ ஒன் பேசலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் இன்று முதல் திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை ஸ்டாலின் சந்திக்கிறார். உடன்பிறப்பே வா என இந்தச் சந்திப்பிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுகவின் ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.





