கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குளங்களின் கொள்ளளவு இரு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்ச மா.சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கியுள்ள நேரத்தில் தமிழ்நாடு முதல்வர் அனைத்து துறையினருடனும் ஆலோசனை நடத்தி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அந்தவகையில் இவ்வாண்டு துணை முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
குளம் விரிவாக்கம்
சென்னையில் மேற்கொண்டு வருகின்ற மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி, இன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கடந்த ஆண்டு இங்கிருந்து வந்த மழைநீரால் மடுவின்கரை போன்ற பல்வேறு பகுதிகள் பெரிய பாதிப்புக்கு உள்ளானது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு இந்த குதிரை பந்தயம் மைதானத்தில் அரசு கையகப்படுத்தி 4.77 மில்லி கான லிட்டர் மழை நீரை கொள்ளளவு கொள்ளும் வகையில் 27,647 சதுர மீட்டர் புதிய குளங்கள் இங்கு உருவாக்க உத்தரவிட்டார். தற்போது 49,072சதுர மீட்டர் அளவிற்கு விரிவு செய்யப்பட்டுள்ளது.
பருவமழைக்குத் தயார்
8.66 மில்லியன் கனலிட்டர் தேக்கும் அளவிற்கான குளங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை இது தென் சென்னைக்கு மழை நீர் குடியிருப்புக்குள் புகாத வண்ணம் எடுக்கப்பட்ட நடவடிக்கை அந்த பணிகள் முடிவுறும் தருவாயில் இருக்கிறது. 1000கி.மீ மழை நீர் வடிகால் மூன்றாண்டுகளில் நிறைவுற்று 600கி.மீ பணிகள் நடைபெறுகிறது. அதுவும் பருவமழைக்கு முன்னர் நிறைவு பெறும். 8செ.மீ, 9செ.மீ மழை பெய்த போதிலும் மழை நீர் தேக்கம் பெரியளவில் இல்லை, உடனடியாக தேங்கிய நீரும் வடிந்து விட்டது. மேலும் அனைத்து மழை நீர் வடிக்கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கும் முன்பே ஒட்டு மொத்த பணிகளும் முடிவுறும். கோடை வெப்பமழை ஒரு மணி நேரம் ஒன்னரை மணி நேரத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் 8 முதல் 9 சென்டிமீட்டர் மழை இருந்தது, ஆனாலும் பாதிப்பு என்பது அரை மணி நேரத்திற்குள்ளாகவே சரி செய்யப்பட்டது.
நல்லக்கண்ணு ஐயா…
நல்லகண்ணு ஐயா 24ஆம் தேதி இரவு இராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று அப்பல்லோவிலிருந்து இரு மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவர் செயற்கை சுவாசத்திலுள்ளார், அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சுவாச குழாயில் உணவு துகள்கள் இருந்துள்ளது..
திண்டிவனத்தை தாண்டி வாங்க அன்புமணி
முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை வெளிநாடு செல்வதை ஒட்டி அவரது உடல் நலம் குறித்த கேள்விக்கு,
முதல்வர் நலமாக உள்ளார்கள் இன்று காலை அவருடன் மூன்றரை கி.மீட்டர் நடைப்பயணம் மேற்க்கொண்டேன். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயாராக இல்லை என அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர், அரசியலுக்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது. திண்டிவனத்தை தாண்டி வந்து சென்னையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தபின் இது போன்ற பேச்சுகளை பேசலாம் எனத் தெரிவித்தார்.




