84 பாடங்களுக்கான Cut-off மதிப்பெண்களும் வெளியானது; ஆன்லைனில் முடிவுகளை பார்க்கலாம்
UGC-NET ஜூன் 2026 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது முடிவுகளை UGC-NET இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் Junior Research Fellowship (JRF), உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் Ph.D. சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக UGC-NET தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன் மாத UGC-NET தேர்வை தேசிய தேர்வு முகமை கணினி வழித் தேர்வு முறையில் நடத்தியது. தேர்வு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து English, Commerce மற்றும் Sociology ஆகிய மூன்று பாடங்களுக்கு மறுதேர்வும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து UGC-NET June 2026 முடிவுகளை NTA தற்போது வெளியிட்டுள்ளது. 84 பாடங்களுக்கான Cut-off வெளியீடு தேர்வு முடிவுகளுடன் 84 பாடங்களுக்கான category-wise cut-off மதிப்பெண்களையும் NTA வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு பாடத்திலும் பொதுப்பிரிவு, EWS, OBC-NCL, SC, ST உள்ளிட்ட பிரிவுகளுக்கான தகுதி மதிப்பெண்களை தேர்வர்கள் தனித்தனியாக தெரிந்துகொள்ள முடியும்.
JRF மற்றும் உதவிப் பேராசிரியர் தகுதி உள்ளிட்ட பிரிவுகளுக்கான cut-off விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவுகளை எப்படி பார்ப்பது?
UGC-NET அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேர்வர்கள் தங்களது login விவரங்களைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். முடிவுகளுடன் score card மற்றும் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான cut-off மதிப்பெண்களையும் சரிபார்த்துக்கொள்ளலாம். UGC-NET தேர்வில் வெற்றி பெறுவது மட்டும் அனைவருக்கும் ஒரே வகையான தகுதியை வழங்காது. தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் cut-off அடிப்படையில் JRF மற்றும் Assistant Professor தகுதி அல்லது Ph.D. சேர்க்கைக்கான தகுதி உள்ளிட்ட பிரிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே தேர்வர்கள் தங்களது score card-ல் குறிப்பிடப்பட்டுள்ள qualification status-ஐ கவனமாக சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.






