கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் பருவமழை அதிகரிக்கத்தொடங்கியது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், பீகார் போன்ற மாநிலங்கள் எல்லாம் நீரில் தத்தளித்தன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழத்து தவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழை இன்னும் தீவிரமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது கேரளாவின் மத்திய பகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகளில் தற்போது கனமழை பெய்வதால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நீர் சூழ்ந்து, சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழையால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகமான மழை பொழியும் என்பதால் அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதோடு தொடர்ந்து 4 நாட்களுக்கு மகாராஷ்ட்ராவின் பல்வேறு பகுதிகளிலும் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.