ஜெகன் மோகனின் குடும்பத்தை எந்த ஒரு தீய சக்தியும் நெருங்க கூடாது என்ற நோக்கத்துடன் அவருக்கு கோவில் கட்டுகிறேன் என்று எம்.எல்.ஏ. வெங்கட்ராவ் அறிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ கோவில் கட்ட திட்டமிட்டுள்ளார். அதற்கான பூமிபூஜை செய்த நிகழ்வு ஆந்திர வட்டாரத்தில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.நடிகர்-நடிகைகளுக்கு கோவில் கட்டிவதை பார்த்திருக்கிறோம்.இறந்த தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதையும் பார்த்திருக்கிறோம்.ஆனால் உயிருள்ள ஒருவருக்கு அதும் முதல்வருக்கு கோவில் கட்டுவது என்றால் அவர் எத்தகையவராக இருப்பார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகனுக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் தொகுதி எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ் கோவில் ஒன்றை கட்ட திட்டமிட்டு,கோபாலபுரம் மண்டலம் ராஜம்பாளையத்தில் ஜெகன் மோகனுக்கான கோவிலுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளார் வெங்கட்ராவ்.
மக்களின் நிலையை கண்டு ராஜசேகர ரெட்டியும் ஜெகன் மோகன் ரெட்டியும் யாத்திரை மேற்கொண்டு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். ஜெகன்மோகனின் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினர் நினைவு கூறும் வகையில் இந்த கோவில் கட்டப்படுகிறது என்றும் அந்த குடும்பத்தை எந்த ஒரு தீய சக்தியும் நெருங்க கூடாது என்ற நோக்கத்துடன் அவருக்கு கோவில் கட்டுகிறேன் என்று வெங்கட்ராவ் அறிவித்துள்ளார்.