கொரோனா பாதிக்ககப்பட்டு மீண்டவர்கள் உடலில், வைரஸை எதிர்க்கும் ஆண்டிபாடீஸ்,பிளாஸ்மா செல்களில் இருக்கும் அவற்றை கொரோனா பாதித்தவர்களுக்கு செலுத்துவதே பிளாஸ்மா தானம்.

பிளாஸ்மா தானம் செய்வதால் கொரோனா பாதித்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.எனவே தான் அரசு மற்றும் மருத்துவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய சொல்கிறார்கள்.ஆனால் எல்லோரும் பிளாஸ்மா தானம் செய்யமுடியாது.
பிளாஸ்மா தானம் என்பது கொரோனா பாதித்து மீண்டவர் உடலில் புரோட்டீன்ஸ் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி இரத்த செல்களில் அதிகரிக்கும்.
உடல் எடை 50 கிலோவிற்கு அதிகமாக இருக்க வேண்டும்,குழந்தை பெற்ற தாய்மார்கள்,கருவுற்றிருக்கும் பெண்கள்,ஹிமோகுளோபின் குறைந்த அளவு இருப்பவர்கள்,சர்க்கரை நோய்,இதய பாதிப்பு, ஹெச் ஐ.வி பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, ஹெபடைடிஸ் பாதிப்பு உள்ளவர்களால் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 18-50 வயது உடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம்.




