ஆடி நிறுவத்தின் இந்தியத்தலைவர்கள், ஜெர்மனியில் உள்ள ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனத் தலைவர்கள் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
நச்சுக்காற்று மற்றும் மாசு உமிழ்வு அளவுகளை குறைத்துக்காட்டும் போலி கருவிகளை,கார்களில் பொருத்தி ஏமாற்றி விட்டதாக பிரபல கார் நிறுவனமான ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடி & ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் மீது இந்தியாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். 2018-ஆம் ஆண்டு அனில்ஜித் சிங் என்பவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆடி கார்கள் வாங்கினார். அப்போது இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட மாசுகட்டுப்பாட்டு அளவை விட அதிக நச்சுக்காற்று வெளியேறுவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.